வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ திடீர் மரணம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ திடீர் மரணம் முழு விவரம்
வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி(60] உடல்நலக்குறைவால் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகலில் உயிர் பிரிந்தது
உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. 60 வயதான இவர், அதிமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு அமுல் கந்தசாமி வெற்றிப்பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
Tags: அரசியல் செய்திகள்