பெங்களூரில் ஸ்கூட்டரில் உரசிய ஆட்டோ , ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண்..! வைரல் ஆகும் வீடியோ
பெங்களூரில் ஸ்கூட்டரில் உரசிய ஆட்டோ , ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண்..! வைரல் ஆகும் வீடியோ
பெங்களூருவின் பெல்லந்தூர் பகுதியில், ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ அவர் மீது லேசாக உரசியுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண், ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரை தனது செருப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
மேலும், அவர் ஆட்டோ ஓட்டுநரை இந்தி மொழியில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை ஆட்டோ ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம் மாநிலம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் மென்பொருள் பொறியாளர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரின் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கூறியுள்ளார் இந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1929562961237901746
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ