Breaking News

பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி - முழு விவரம்

அட்மின் மீடியா
0

பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி - முழு விவரம்


தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலம் இலவசமாக ஆட்டோ ஓட்ட பயிற்சி வழங்கப்படுகின்ரது.

இந்த பயிற்சியில் ஆட்டோ ஓட்டுநராக விருப்பப்படும் பெண்கள் இந்த பயிற்சியில் இணையலாம். இவர்களுக்கு வாகனம் ஓட்டுவது குறித்து கற்றுக்கொடுக்கப்படும்.  மேலும் மின்சார ஆட்டோ வாகனத்தை இயக்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இதன் மூலம் பேட்ஜ் உடன் கூடிய ஓட்டுநர் உரிமத்தை பெறலாம்.

வயது வரம்பு:-

இந்த பயிற்சி 21 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் இணையலாம். 

கல்வித்தகுதி:-

8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்கள் இணையலாம்.

இந்த பயிற்சி ஒரு நாளுக்கு 6 மணி என  45 நாள்கள் அதாவது 270 மணிநேரம் இந்த பயிற்சி அளிக்கப்படும். 

பயிற்சி முடித்தவுடன் நீங்கள் சுயமாக மின்சார ஆட்டோ வாங்கி தொழில் செய்யலாம். ஓட்டுநராக கூட செல்லலாம். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback