AIR INDIA விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நாளிதழ் முழு விவரம்
AIR INDIA விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நாளிதழ் முழு விவரம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர 241 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசித்திரமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது நேற்று காலை Mid- day ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் ஏர் இந்தியா விமானம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. கிட்ஜானியாவின் தந்தையர் தின நிகழ்வை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தில், ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் ஒரு அனிமேஷன் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் சிக்கியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பிற்பகலில் நிகழ்ந்த விமான விபத்துக்குப் பிறகு விமானத்தின் முன் பகுதி ஒரு கட்டிடத்தில் சிக்கியது. இதனைக் கண்ட சமூக வலைத்தள பயனர்கள் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட காட்சியை உண்மையில் நிகழ்ந்திருப்பதாக கூறி வைரலாக்கி வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்