Breaking News

போபாலில் ரயில் மேம்பாலம் 90° வளைவில் திருப்பம் கொண்ட வகையில் கட்டப்பட்டுள்ளது - விபத்து ஏற்படும் அபாயம் என நெட்டிசன்கள் கருத்து A railway overbridge in Bhopal with 90 degrees turn

அட்மின் மீடியா
0

போபாலில் ரயில் மேம்பாலம் 90° வளைவில் திருப்பம் கொண்ட வகையில் கட்டப்பட்டுள்ளது - விபத்து ஏற்படும் அபாயம் என நெட்டிசன்கள் கருத்து  A railway overbridge in Bhopal with 90 degrees turn

 மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 90° வளைவில் திரும்புவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக நெட்டிசன்கள் கருத்து.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியம் அருகே கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் (RoB) தொடங்கப்படுவதற்கு முன்பே விமர்சனத்திற்க்கு உள்ளாகி உள்ளதுஏனெனில் இது ஒரு விசித்திரமான 90 டிகிரி திருப்பத்தைக் கொண்டுள்ளது, 

இந்த மேம்பாலம் 648 மீட்டர் நீளமும் 8.5 மீட்டர் அகலமும் கொண்டது எஇது தொண்ணூறு டிகிரி திருப்பமாக இருப்பதால், சமூக ஊடக பயனர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அதன் வடிவமைப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த வகையான திருப்பம் விபத்துகளுக்கு வழிவகுக்கும், ஏனெனில் இந்த கோணம் காரணமாக வாகனங்கள் திருப்பத்தை சமாளிப்பது கடினமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், பொதுப்பணித் துறை (பாலத் துறை) தலைமைப் பொறியாளர் வி.டி. வர்மா பிடிஐயிடம், “மெட்ரோ நிலையம் காரணமாக, அந்தப் புள்ளியில் நிலம் குறைவாகவே உள்ளது. நிலம் இல்லாததால், வேறு வழியில்லை. இரண்டு காலனிகளையும் இணைப்பதே ஆர்ஓபியின் நோக்கம்” என்று கூறினார்.இந்த மேம்பாலத்தில் சிறிய வாகனங்கள் மட்டுமே ஓடும் என்றும், கனரக வாகனங்கள் இதைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback