துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து வீடியோ 67-storey Dubai Marina building catches fire
துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து வீடியோ 67-storey Dubai Marina building catches fire
துபாயில் உள்ள மெரினா பகுதியில் அமைந்துள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணி அளவில் 47வது அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு கட்டிடத்தில் மொத்தம் உள்ள 764 வீடுகளில் உள்ள நிலையில், அந்த கட்டிடத்தில் இருந்த 3,820 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 6 மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக துபாய் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியேற்றப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விரிவான சுகாதார மற்றும் உளவியல் ஆதரவை வழங்க ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
இந்த தீ விபத்தில் துபாய் சிவில் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1933914283911548939
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ