திருவள்ளூர் அருகே பாலியல் புகார் அளிக்க வந்த கர்பிணி பெண் உட்பட 3 பேரை தாக்கிய காவலர் சஸ்பெண்ட் வைரல் வீடியோ
திருவள்ளூர் அருகே பாலியல் புகார் அளிக்க வந்த கர்பிணி பெண் உட்பட 3 பேரை தாக்கிய காவலர் சஸ்பெண்ட் வைரல் வீடியோ
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக சென்ற செவ்வந்தி என்ற கருவுற்ற பெண் உள்பட 3 பெண்கள் அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றும் ராமன் என்ற காவலரால் கொடூரமாகத் தாக்கும் காணொலி இணையத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கே.கே.சத்திரம் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணைத் தாக்கிய காவலர் ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/nellaiselvin87/status/1937476995190837327
Tags: தமிழக செய்திகள்