Breaking News

நாடு முழுவதும் 3395 பேருக்கு கொரோனா...!

அட்மின் மீடியா
0

 இந்தியா முழுவதும் 3395 பேருக்கு கொரோனா...!

கொரோனா வைரஸ் பரவல் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கர்நாடகம், தமிழ்நாடு, மராட்டியம், கேரளா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் நேற்று ஒரே நாளில் மட்டும் 685 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback