Breaking News

புதிய பைக் வாங்கினால் 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

 இனி புதிய பைக் வாங்கினால் 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!



புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்ட விதி உள்ளது. ஆனால் பலர் அதனை பின்பற்றுவதில்லை.பைக்குகளுக்கு 2 ஹெல்மெட்இந்த நிலையில் வரும் ஜனவரி 2026 முதல் புதிதாக வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்கும் நோக்கில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback