Breaking News

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள் பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

திமுக மாநில பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது

பொதுக்குழுவில கலந்து கொள்ள நேற்று பிற்பகல் 1 மணியளவில் விமானம் மூலம் மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 25 கி.மீ தூரத்திற்கு பிரம்மாண்ட அளவில் ரோடு ஷோ நடைபெற்ற நிலையில், சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மலர்த்தூவி, வாழ்த்து கோஷமிட்டு வரவேற்பு அளித்தனர்.



இந்நிலையில் இன்று காலை உத்தங்குடியில் அமைக்கப்பட்டுள்ள விழா அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றினார் அதனை தொடந்ர்து பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் வாழ்த்து பெற்ற படியே நடந்து சென்றார். தொடர்ந்து பெரியார், அறிஞர் அண்ணா, பேராசிரியர் படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். 

1. கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!

2. மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்!

3. இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!

4. உழவர்கள் - நெசவாளர்கள் - மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்!

5. தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் திமுக அரசுக்கு பாராட்டு!

6. ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!

7. தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதல்-அமைச்சர் - இளம் தலைவரின் பணி தொடரத் துணை நிற்போம்!

8. ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!

9. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம்!

10. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!

11. கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!

12. ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!

13. சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!Also Readnews-imageஎடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துபெற்ற அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள்

14. மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

15. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்!

16. மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!

17. சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!

18. தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!

19. கவர்னரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குக் காரணமான திமுக தலைவருக்குப் பாராட்டு!

20. துணை ஜனாதிபதியின் விமர்சனத்திற்குக் கண்டனம்!

21. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் சுப்ரீம் கோர்ட்டோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!

22. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!

23. மலரட்டும் மாநில சுயாட்சி!

24. பேரிடர் மீட்புப் பணியில் திமுக அரசுடன் திமுகவினரும் துணை நிற்போம்!

25. எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்

26. அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு

27. வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் திமுக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback