Breaking News

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள்? முகங்கள்3D முறையில் வடிவமைப்பு! Faces Of Keezhadi

அட்மின் மீடியா
0

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள்? முகங்கள்3D முறையில் வடிவமைப்பு!

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் மண்டை ஓட்டினை வைத்து வடிவமைப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு கிடைக்கப்பெறும் தொல்லியல் சான்றுகள் மூலம் , கீழடியில் நகர நாகரிகம் நிலவியது உறுதியாகியுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர் நாகரிகம் உலகுக்கே முன்னோடியாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகத்தை மறு வடிவமைப்பு செய்திருக்கின்றனர். கீழடி கொந்தகையில் 800 மீ அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 3டி முறையில் 2 பழந்தமிழர்களின் முகங்கள் வடிமைக்கப்பட்டிருக்கிறது.

டி.என்.ஏ பகுய்ப்பாய்வு நடத்தி இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. கீழடி ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயது மனிதர்களுடையவை என்றும், கொந்தகை பகுதியில் வாழ்ந்த ஆண்கள் 5.7 அடியும், பெண்கள் 5.2 அடி உயரத்திலும் இருந்திருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் முகங்கள் எப்படி இருக்கும் என நடத்திய ஆய்வின் அடிப்படையில் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வகம் 3 டி முறையில் தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்துள்ளது , இந்த முகம் 80 விழுக்காடு அறிவியல், 20 விழுக்காடு கலைப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன என  டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback