Breaking News

டெல்லியில் தெருநாய்களின் தொல்லையை தவிர்க்க பக்கத்து தெரு செல்ல 180 மீட்டர் தூரத்திற்கு OLA Bike புக் செய்த பெண் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

டெல்லியில் தெருநாய்களின் தொல்லையை தவிர்க்க பக்கத்து தெரு செல்ல 180 மீட்டர் தூரத்திற்கு OLA Bike புக் செய்த பெண் வைரல் வீடியோ



வைரல் ஆகும் வீடியோவில் பெண் ஒருவர் ஓலா பைக்கை புக் செய்துவிட்டு சாலையில் நிற்கிறார். பின்னர் ஓலா பைக் ஓட்டுநர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்கிறார்.

அதற்கு அந்த பெண் அருகில் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். உடனே அந்த டிரைவர் மேப்பில் பார்த்து விட்டு இந்த இடம் 180 மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது, இதற்கு ஏன் புக் செய்தீர்கள் என கேட்கிறார்.அதற்கு அந்த பெண் அந்த பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் புக் செய்தேன் என்று கூறுகிறார்.

அந்தப் பெண்ணுக்கு தெரு நாய்கள் என்றால் மிகவும் பயம் என்றும், அந்த நாய்களைக் கடந்து நடந்து செல்ல அவருக்கு விருப்பமில்லை என்பதையும் அந்த பெண் விளக்கி கூறியுள்ளார். இந்த காரணத்தை கேட்டு முற்றிலும் ஆச்சரியமடைந்த அந்த ஓட்டுனர் அப்பெண்ணை 180 மீட்டர் அப்பால் இறக்கி விட்டு விட்டு அந்த பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதற்கான கட்டணமாக அந்த பெண்ணிடம் 19 ரூபாய் பெற்றுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1932109143063539943

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback