11 பேரின் உயிரை பறித்த RCB வெற்றிக் கொண்டாட்டம் விராட் கோலி மீது வழக்கு பதிவு என பரவும் தகவல் உண்மை என்ன..! Is Virat Kohli among those named in the FIR
11 பேரின் உயிரை பறித்த RCB வெற்றிக் கொண்டாட்டம் விராட் கோலி மீது வழக்கு பதிவு என பரவும் தகவல் உண்மை என்ன..! Is Virat Kohli among those named in the FIR
பரவும் செய்தி:-
ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி முதல் முறையாக வென்றிருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை தம் வசப்படுத்தி இருக்க்கும் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் திரளான கூட்டம் கூடியது.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் கப்பன் பார்க் போலீஸ் ஸ்டேஷனில் கூட்ட நெரிசலுக்கும், கோலிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது அளித்த புகார் மீது கோலி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. என சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டு இருந்தன
தற்போது கோலி, மனைவி அனுஷ்காவுடன் லண்டனில் உள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்மை என்ன:-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜூன் 4 அன்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது சமூக ஆர்வலர் ஹெச்.எம். வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
இந்த விபத்துக்கு கோலிதான் காரணம் என்று புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு எதிராக இதுவரை நேரடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து காவல்துறை தரப்பில், வெங்கடேஷின் புகார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரின் ஒரு பகுதியாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது எஃப்.ஐ.ஆரில் விராட் கோலியின் பெயர் சேர்க்கப்படவில்லை. மாறாக புகாரின் ஒரு பகுதியில் அவர் பெயர் இடம் பெற்று இருக்கும். அதனால் கோலி குற்றவாளியாக கருதப்படமாட்டார். எனவே, கோலியை கைது செய்யவோ, நேரடி விசாரணைக்கோ இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என பிரபல கிரிக்கெட் டைம்ஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
https://crickettimes.com/2025/06/fact-check-is-virat-kohli-among-those-named-in-the-fir-for-the-bengaluru-stampede/
Tags: FACT CHECK மறுப்பு செய்தி