Breaking News

ஐடிஐ படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ,எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம் Tamil Nadu ITI Admission 2025

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு ஐடிஐ நிலையங்களில் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ,எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம் Tamil Nadu ITI Admission 2025

தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. 

இவற்றில் தற்போது 2025-2026-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற

கல்வி தகுதி:-

8 ம் வகுப்பு  தேர்ச்சி

9 ம் வகுப்பு 

9ம் வகுப்பு தோல்வி

10 ம்வகுப்பு தேர்ச்சி

10 ம் வகுப்பு தோல்வி 

12 ம் வகுப்பு தேர்ச்சி

பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்

தேவையான ஆவணங்கள்:-

படிப்பு சான்றிதழ் 

ஆதார் கார்டு 

புகைப்படம் 

ஜாதி சான்றிதழ் 

சலுகைகள்:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/-, 

பேருந்து கட்டண சலுகை,

மிதிவண்டி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் மற்றும் 1 செட் காலணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இனையதளம் மூலம் விண்னப்பிக்க:-

https://skilltraining.tn.gov.in/DET/ 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

13.06.2025

மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி : itiadmission2024@gmail.com

அலைபேசி எண் மற்றும் : 9499055689

அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ITI-ல் சேர்ந்து பயன்பெறவும்

Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback