Breaking News

மரணம் எப்போது வரும்.? எப்படி வரும்.? பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் நெஞ்சுவலியால் மரணம் , பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய நடத்துநர் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0
மரணம் எப்போது வரும்.? எப்படி வரும்.? பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் நெஞ்சுவலியால் மரணம் , பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய நடத்துநர் சிசிடிவி வீடியோ 





திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட  தனியார் பேருந்தை பிரபு (56) என்பவர் புதுக்கோட்டை கிராமத்திற்கு இயக்கிச் சென்றுள்ளார். 

அப்பேருந்து கணக்கம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பிரபுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது அதனால் அவர் பேருந்தை இயக்க முடியாமல் தமது இருக்கையில் அப்படியே சரிந்து விழுந்துள்ளார். 

இதையடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அப்பேருந்தின் நடத்துநர் சாதுர்யமாக செயல்பட்டு, பேருந்தின் பிரேக்கை பிடித்து, பஸ்ஸை இயக்கி சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார். அத்துடன் மயங்கி விழுந்த ஓட்டுநரை மீட்ட நடத்துநர் மற்றும் பயணிகள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. 

பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் நெஞ்சுவலியால் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1926553577083768859

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback