பெயரில் கூட பாக் இருக்க கூடாது மைசூர் பாக் பெயரை மைசூர் ஸ்ரீ என மாற்றிய இனிப்பகங்கள் முழு விவரம்
பெயரில் கூட பாக் இருக்க கூடாது மைசூர் பாக் பெயரை மைசூர் ஸ்ரீ என மாற்றிய இனிப்பகங்கள் முழு விவரம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு |அளிக்கும் விதமாக மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்புகளின் பெயர்கள் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாக்' என்ற வார்த்தையே தங்களுக்கு அசௌகரியத்தை தருவதாக வாடிக்கையாளர்கள் கூறியதால் பெயரை இவ்வாறு மாற்றியுள்ளதாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல த்யோஹார் ஸ்வீட்ஸின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் அறிவித்துள்ளார்
மேலும் அந்த கடையின் மிகவும் பிரத்யேக படைப்புகளான - தங்கம் மற்றும் வெள்ளி இலைகளால் நிரப்பப்பட்ட ஸ்வர்ன் பாஸ்ம் பாக் மற்றும் சாண்டி பாஸ்ம் பாக் ஆகியவை ஸ்வர்ன் ஸ்ரீ மற்றும் சாண்டி ஸ்ரீ என்று மறுபெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜெய்ப்பூர் முழுவதும் உள்ள பல இனிப்பு கடைகள் தியோஹாரின் வழியைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
Tags: இந்திய செய்திகள்