Breaking News

கல்லூரி மாணவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறிய வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கல்லூரி மாணவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறிய வைரல் வீடியோ

ஆந்திராவில் கல்லூரி மாணவனின் பேண்ட் பாக்கெட்டில் (PANT POCKET) வைக்கப்பட்டிருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியதில் மாணவர் காயம் அடைந்தார்.

அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனுஷ் என்ற மாணவர் படித்து வருகிறார்.இந்நிலையில், அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் சூடாகி வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் தொடைப் பகுதியில் மாணவன் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1925818347691642891

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback