Breaking News

துபாய்ல இதுக்கு பேரு குப்ப லாரி - அரசுப்பேருந்தை விமர்சித்து ரீல்ஸ் எடுத்த பெண்கள் முழு விபரம்

அட்மின் மீடியா
0

இதுக்கு பேரு தான் பஸ்ஸா துபாய்ல இதுக்கு பேரு குப்ப லாரி..! அரசுப்பேருந்தை விமர்சித்து ரீல்ஸ் எடுத்த பெண்கள் குறித்து போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த ஆத்தூர் செல்லும் அரசு பேருந்து முன்பு இரண்டு இளம் பெண்கள் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில் பொதுமக்கள் பயணிக்கும் அரசு பேருந்தை குப்பை லாரியுடன் ஒப்பிட்டு ரீல்ஸ் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

ரீல்ஸ் மோகத்தில் அரசு பேருந்தை இழிவுபடுத்தி வீடியோ பதிவிட்ட இளம் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனையடுத்து வாழப்பாடி போலிசார், அந்த பெண்கள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/updatenewstamil/status/1920029119657787468

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback