Breaking News

பாமக கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிய முக்கிய நிர்வாகிகள் பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

பாமக கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிய முக்கிய நிர்வாகிகள்பட்டியல் இதோ


பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். 

இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் அன்புமணி தலைமையில் பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்:-

விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சிவக்குமாருக்கு பதிலாக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாகவும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பொருளார்:-

பாமகவின் பொருளாளர் திலகபாமாவை பொறுப்பிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அவருக்கு பதிலாக சையது மன்சூர் உசேன் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக இருந்த பச்சையப்பனை நீக்கி புதிய மாவட்ட தலைவராக ஜோசுவா என்பவரை நியமித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஈரோடு 

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளராக இருந்த ராஜ் என்பவரை மாற்றி பொ.வை. ஆறுமுகம் என்பவரை நியமித்தார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி அறிவிப்பு:-

நிறைய மன உளைச்சலில் இருந்தேன். நேற்றுதான் விடுதலை கிடைத்தது. இனி எந்த தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து, நாம் வேகமாக பயணிப்போம். என் மீது சொல்லப்பட்ட அபாண்டமான பழிகளை தட்டிவிட்டு செல்வேன். என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம், வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியிலிருந்து யார் நீக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே நியமன கடிதம் அனுப்புவேன். என்னுடைய கடிதம் மட்டுமே செல்லும். பாமகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் புதுப்பிப்பை 3 வாரங்களில் முடிக்க வேண்டும்.பாமக அடுத்த கட்டத்திற்கு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், ராமதாஸ் கொள்கைகளை கடைப்பிடிப்போம்.எனக்கு நல்ல டீம் அமைந்துள்ளது, 

அதை கெடுக்க சூழ்ச்சி நடக்கிறது. ராமதாஸ் கொள்கைகளை மனதில் வைத்து தேர்தல் களத்தில் செயல்படுவோம். ராமதாஸின் சமூக நீதி, சமத்துவம் என்ற கொள்கைகளை பின்பற்றுவோம். ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் ” என்றார்

கட்சி முகவரி மாற்றம்:-

பாமகவின் கட்சி அலுவலக முகவரியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார். உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் புதிய முகவரியாக தியாகராய நகர் திலக் தெரு முகவரி இடம்பெற்றுள்ளது. சென்னை, தி.நகர் தெருவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக அன்புமணி மாற்றியுள்ளார். முன்னதாக ராமதாஸ் வீட்டின் தைலாபுரம் இல்ல முகவரி இடம்பெற்றிருந்தது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback