மதுவிலக்கை நீக்கும் சவுதி அரேபியா என பரவும் தகவல் உண்மையா about the fact Saudi Arabia lift alcohol ban
மதுவிலக்கை நீக்கும் சவுதி அரேபியா என பரவும் தகவல் உண்மையா about the fact Saudi Arabia lift alcohol ban
பரவிய செய்தி:-
சவூதி அரேபியா தனது நீண்டகால மதுவிலக்கை, 2026 ஆம் ஆண்டுக்குள் நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளையும் சர்வதேச வணிகங்களையும் கவரும் வகையில் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது
எக்ஸ்போ 2030 மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பை 2034 போன்ற சர்வதேச நிகழ்வுகளுக்கு நாடு தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. என சில மீடியாக்களில் செய்திகள் வலம் வருகின்றது.
உண்மை என்ன:-
1932ஆம் ஆண்டு இஸ்லாமிய நாடான சவூதி அரேபியா உருவானது. இந்த நாடு இஸ்லாமிய ஷரியா சட்டத்தைப் பின்பற்றுவதால் அங்கு மதுபானத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.
மேலும் இந்த மது விற்பனைக்கான தடையானது, மது விற்பனை மற்றும் நுகர்வு மீதான சட்டத் தடை 1952 இல் கொண்டுவரப்பட்டு, சட்டப்படி முறைப்படுத்தப்பட்டது
இந்நிலையில் வரும் 2034ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது
கால்பந்து போட்டியை காண பல நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 600 சுற்றுலாத் தலங்களில் மட்டும், ஒய்ன், பியர் போன்ற ஆல்கஹால் குறைந்த மதுபானங்களின் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் சில ஆங்கில மீடியாக்களிலும், தமிழக மீடியாக்களிலும் செய்திகள் வெளியானது
மறுப்பு:-
மதுபானத்துக்கு அனுமதி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், மது விலக்கு தொடரும் என்றும் கத்தாரில் உலகக் கோப்பை நடந்தபோது அங்கும் மது விற்பனைக்குத் தடை இருந்ததையும் சவூதி அதிகாரிகள் கூறியதாக பிரபல ராய்ட்டர்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.reuters.com/world/middle-east/saudi-arabia-official-denies-reports-lifting-ban-alcohol-2025-05-26/
Tags: FACT CHECK மறுப்பு செய்தி