காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை என்கவுன்டர் செய்த இந்திய ராணுவம் வெளியான அதிர்ச்சி வீடியோ.!
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை என்கவுன்டர் செய்த இந்திய ராணுவம் வெளியான அதிர்ச்சி வீடியோ.!
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சண்டையின்போது, பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாதிகள் மூன்று பேர்பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஜம்மு - காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் இன்று அதிகாலை இந்திய ராணுவம், ஜம்மு - காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில் மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், பயங்கரவாதிகளில் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஒரு கான்கிரீட் தூணின் பின்னால் பதுங்கியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொலைவில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், பயங்கரவாதிகள் உடைந்த கொட்டகைக்குள் பதுங்கியிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1922988197631455492
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ