Breaking News

அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் போலியான ஆப் - முதலீடு செய்தால் 2 மடங்கு பணம் என கர்நாடகாவில் மோசடி Donald Trump Rental App

அட்மின் மீடியா
0

Donald Trump Rental App’ Scam Defrauds Karnataka Investors Of 2 Crore, Case Registered With Haveri Cyber Police



டிரம்ப் ஹோட்டல் ரெண்டல் (Trump Hotel Rental) என்ற பெயரில் ஒரு செயலியை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி மூலம் மக்கள் வீட்டிலிருந்து வேலை செயலாம்

ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பணியை செய்து முடித்தால், லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் எனவும்  தங்களுடைய பணத்தை முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் கிடைக்கும் என விளம்பரம் செய்திருக்கின்றனர்

மேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த செயலிக்கு ஆதரவாக பேசுவது போலவும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என பேசுவது போலவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு வீடியோவை உருவாக்கி அதை வைத்து விளம்பரம் செய்திருக்கின்றனர். 

ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை உண்மை என நம்பி ஏராளமான மக்கள் தங்கள் கைப்பேசியில் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்து இருக்கின்றனர் .

அந்த ஆப்பில் 1500 ரூபாய் கொடுத்து ஒரு கணக்கு உருவாக்க வேண்டும் அதன்பிறகு அவர்கள் கொடுக்கும் டாஸ்க் முடித்தால் குறிப்பிட்ட தொகையானது அவர்கள் ஆப்பில் வரும் , அந்த ஆப்பில் உள்ள அந்த தொகையை எடுக்க முயன்றால் குறிப்பிட்ட சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். அப்போதுதான் பணம் கிடைக்கும்' என்று அந்த பணத்தையும் கட்டியுள்ளார்கள். ஆனால் லாபமும் கிடைக்கவில்லை; முதலீடு செய்த பணமும் திருப்பி கிடைக்கவில்லை.

மேலும் பணத்தை இந்த செயலி வாயிலாக முதலீடு செய்யும்போது இரட்டிப்பு பணம் கிடைக்கும் என விளம்பரம் செய்தனர் ,அதன்படி பலரும் லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலரும் தங்களுடைய பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புகார் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback