மின் கட்டணம் உயர்வு என வெளியான தகவல் - அமைச்சர் சிவசங்கர் மறுப்பு

அட்மின் மீடியா
0

மின் கட்டண உயர்வு இல்லை - மின்சாரச் சலுகைகளும் தொடரும் - அமைச்சர் சிவசங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்-மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்.



கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது. அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும். எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் என்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback