தமிழகம் முழுவதும் ரூ.199 கட்டணத்தில் அதிவேக இணைய வசதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் ரூ.199 கட்டணத்தில் அதிவேக இணைய வசதி முழு விவரம் 




அனைத்து மக்களுக்கும் அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு 'பாரத் நெட்' திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளில் 'ஆப்டிகல் பைபர் கேபிள்கள் மூலம் அதிவேக இணைய தள சேவை வழங்க திட்டமிட்டு 2018-ம் ஆண்டு தொடங்கியது.இந்த திட்டத்திற்காக தமிழகத்தில் சுமார் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் பதிக்கப்பட்டு உள்ளன.

அரசின் அனுமதி பெற்று உடனடியாக பொதுமக்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விடும். அடுத்த மாதத்தில் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக நிறுவனங்களுக்கு ஏற்றபடி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதாவது வீடுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.199 கட்டணத்தில், 20 எம்.பி.பி.எஸ் (Mpbs) வேகத்தில் அளவில்லா இணையதள சேவை வழங்கப்படுகிறது. 

அதனைத்தொடர்ந்து ரூ.399 மற்றும் ரூ.499 திட்டமும் வழங்கப்பட உள்ளது. அதில் அதற்கேற்ற வகையில் வேகம் இருக்கும்.

அதேபோல் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன. ஆனால் இவற்றில் மாற்றம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

https://tanfinet.tn.gov.in/

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback