Breaking News

1960 ஆம் ஆண்டு நேரு காலத்தில் போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? வாங்க தெரிந்து கொள்ளலாம் Indus Waters Treaty

அட்மின் மீடியா
0

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? வாங்க தெரிந்து கொள்ளலாம் 




காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட 5 முடிவுகளை இந்திய அரசு அறிவித்தது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது

இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை  இந்தியா வழங்கி வந்தது.

சிந்து நீர் ஒப்பந்தம் Indus Waters Treaty சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960-இல் ஏற்பட்டதாகும்

அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். உலக வங்கி மூன்றாவது சாட்சியாக ஒப்பமிட்டது.

இதன் படி சிந்து ஆறும் அதன் துணை ஆறுகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்குப் பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்குப் பகுதி ஆறுகள் எனவும் பிரிக்கப்பட்டன. 

இதன் படி கிழக்குப் பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவுக்கும் மேற்குப் பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கும் உரிமை வழங்கப்பட்டது. கிழக்குப் பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காக பாகிஸ்தானுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது.

இவ்விரு நாடுகளும் இவ்வொப்பந்தம் தொடர்பான தரவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் ஒத்துழைக்கவும் நிரந்தரமான ஓர் ஆணையத்தை ஏற்படுத்தின. அது சிந்து ஆணையம் என அழைக்கப்பட்டது. இவ்விரு நாடுகள் சார்பிலும் ஒரு ஆணையர் அதற்கு நியமிக்கப்படுகின்றனர்.

ஒப்பந்தம் சொல்வது என்ன:-

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் உள்பட மூன்று போர்கள் நடைபெற்றன. ஆனால் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், இந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருந்ததில்லை.

உரி பயங்கரவாத தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதல் நடந்தபோதும் கூட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால் அது நடக்கவில்லை."இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, எந்தவொரு நாடும் தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது. 

இரு நாடுகளும் ஒன்றுகூடி கலந்து ஆலோசித்தே இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்யலாம் அல்லது ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கலாம்" என்கிறார் பாகிஸ்தான் சிந்து நீர் ஆணையராக இருந்த ஜமாத் அலி ஷா.

முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.mea.gov.in/bilateral-documents.htm?dtl/6439/Indus




சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது.மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகும்.இது அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அயூப் கான் ஆகியோரால் பாகிஸ்தானின் கராச்சியில் உருவாக்கப்பட்டது. உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் கெயெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது.இந்தியா - பாகிஸ்தான் எல்லை தாண்டி பல நதிகள் ஓடுகிறது என்பதால், அவற்றின் நீரைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையேயான ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான வழிமுறை இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் வகுத்தது எனலாம். மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

கிழக்கு நதிகள் மூன்று, மேற்கு நதிகள் மூன்றாகும். அதில் கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகியவற்றின அனைத்தை நீரையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இந்தியாவின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மூன்று போர்கள், கார்கில் மோதல், மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் இருந்தாலும், இது ஒரு வெற்றிகரமான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.இதையும் படியுங்கள்: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இருந்து ஒரே நாளில் வெளியேறிய 10,090 பேர்இந்த நிலையில் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.இந்த நடவடிக்கை மூலம் சிந்து நதியின் நீர் பாகிஸ்தானுக்கு பாய்வதை இந்தியா நிறுத்தும். சிந்து நதி பாகிஸ்தானின் பல மாகாணங்கள் வழியாக அரபிக்கடல் வரை பாய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய தாக்கம் பாகிஸ்தானின் விவசாயத்தில் இருக்கும்.210 மில்லியனுக்கும் அதிகமான பாகிஸ்தான் மக்களின் தண்ணீர் தேவைகளும் இந்த சிந்து நதி நீர் அமைப்பைச் சார்ந்துள்ளது. அது நிறுத்தப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback