Breaking News

3 ஆண்டுகளாக நடக்கும் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

3 ஆண்டுகளாக நடக்கும் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு



நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. 

இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார். 

3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல்முறையாக உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷியா முன்வந்துள்ளது. 

அதேவேளை, புதினின் இந்த அறிவிப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback