Breaking News

இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்றிதழை அறிமுகம் செய்த மகாராஷ்டிரா முழு விவரம் ! MalharCertification

அட்மின் மீடியா
0

100% இந்துக்களால் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' என்ற சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார் மகாராஷ்டிர மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே! malharcertification.com தொடங்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் இல்லாத இடங்களில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள் Malhar Certification

இஸ்லாமியர்களின் ஹலால் முறையை போலவே, 'மல்ஹார்' சான்று வழங்கும் நடைமுறையை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் 

மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள இந்து சமு​தா​யத்​தினருக்​காக முக்​கிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. முற்​றி​லும் இந்​துக்​களால் நடத்​தப்​படும் சரி​யான ஆட்​டிறைச்சி கடைகளை அடை​யாளம் காண ‘மல்​ஹர்’ சான்​றிதழ் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 

அத்​துடன் இறைச்​சி​யில் கலப்​படம் இல்லை என்​பதை உறுதி செய்​ய​வும் இது உதவும். இந்​துக்​கள் மல்​ஹர் சான்​றிதழ் பெற்ற கடை​யில் ஆட்​டிறைச்சி வாங்க வேண்​டும். இந்த சான்​றிதழ் பெறப்​ப​டாத கடை​யில் ஆட்​டிறைச்சி வாங்​கு​வதை தவிர்க்க வேண்​டும். மேலும் இந்த முயற்சி இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்த இளைஞர்​கள் பொருளாதார ரீதி​யாக முன்​னேற்​றம் அடைய​வும் உதவும்.  ஹிந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மட்டுமே இந்த சான்று வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதேஷ் ரானேநிதேஷ் ரானேநிதேஷ் ரானே தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இவரின் தந்தை நாராயன் ரானே ஆரம்பத்தில் சிவசேனாவில் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றார். அங்கிருந்து வெளியில் வந்து தனிக்கட்சி தொடங்கி... கடைசியாக பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளார்.நிதேஷ் ரானேவின் செயல்பாடும், கருத்தும் பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback