Breaking News

புதிய கட்டிடம் கட்ட ஊராட்சியில் அனுமதி பெரும் வழிமுறைகள் என்ன முழு விவரம் இதோ how to apply building plan approval online in tamilnadu

அட்மின் மீடியா
0

 புதிய கட்டிடம் கட்ட ஊராட்சியில் அனுமதி பெரும் வழிமுறைகள்.

ஊராட்சியின் அனுமதி பெறப்பட்ட வீட்டுமனைப் பிரிவினை வாங்கியவர்கள் வீடு கட்ட கீழ்காணும் ஆவணங்களின் நகல் மூன்று பிரதிகள் மனை அமைந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.


1. கட்டிட வரைபடம் நகல்

2 சம்பந்தப்பட்ட விட்டு மனையின் பத்திர நகல் மற்றும் பட்டா நகல்

3. கட்டடத்தின் மொத்த மதிப்பீடு

4. சார்பதிவாளர் அலுவலகத்தில் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றின் நகல்

5. அனுமதி வேண்டி விண்ணப்பம்

பஞ்சாயத்து தலைவர் இதனை ஆய்வு செய்து உரிய தீர்மானம் வாயிலாகச் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்குக் கட்டடம் கட்ட உரிமம் வழங்குவார். இதற்கான குறைந்தபட்ச கட்டணமாகக் கட்டுமானப் பரப்பளவுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூபாய். 5 முதல் அதிகபட்சமாக ரூபாய். 10 வரை கட்டணம் விதிப்பார்கள்.

உதாரணமாக, ஒருவர் 1,000 சதுர அடி பரப்பளவு வீடு கட்டுகிறார். இந்தக் கட்டடத்தின் மதிப்பீடு ரூ.10 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். 1,000 சதுர அடிக்கு குறைந்தபட்சம் ரூ.5 வீதம் ரூ.5,000 தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல ஆணையத்துக்கு ரூ.10,000 (1 லட்ச ரூபாய்க்கு ரூ.1,000 வீதம்), இதனோடு ஆய்வுக் கட்டணம் ரூ.50 மற்றும் வளர்ச்சி கட்டணம் அதிகபட்சம் ரூபாய்.5000 என ஆகமொத்தம் ரூ.20.050 ஊராட்சி நிர்வாகத்துக்குக் கட்டவேண்டும்.

அனுமதி ஒரு வருடம் மட்டுமே செல்லத்தக்கது. அதற்குள் கட்டி முடிக்காவிட்டால் மீண்டும் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். கட்டி முடித்த நாட்களுக்குள் வீட்டு வரி கேட்பு நிர்ணயிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.onlineppa.tn.gov.in/

ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் தொடங்கி இருக்கும் நிலையில் அதற்கான கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கட்டடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை அதன் பரப்பளவு, கட்டடத்தின் உயரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஆகியவை வழங்கி வருகின்றன.

இணையவழி கட்டட அனுமதி பெற http://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தில விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தரும் விவரங்களின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டிய தில்லை. கட்டடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்களிக்கப்படுகிறது.

இந்த இணையத்தை கிளிக் செய்த உடன் இதுபோல ஒரு பக்கம் ஓப்பன் ஆகும். அதன் மேல் இடது முனையில் உள்ள login என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து அதில்  New applicant registration என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து அதில் கேட்டுள்ள பெயர், யூசர்நேம், பிறந்த தேதி,முகவரி,தொடர்பு எண்,மாநிலம்,,மாவட்டம் ,தாலூகா,ஊராட்சி,பின்கோடு, பான்கார்டு,ஆதார் கார்டு,இமெயில் ஐடி விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்யுங்கள்

அடுத்து உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துவிட்டு Create account என்பதை அழுத்தினால் உங்களுக்கான கணக்கு உருவாக்கப்படும்.

அதன்பின்பு தற்காலிக பாஸ்வேர்டு கைபேசி எண்ணிற்கும்,இமெயிலுக்கும் வரும். அதன்பிறகு login செய்து விண்ணப்பத்தை பதிவு செய்ய தொடங்கலாம்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback