அரசியல் கட்சி கூட்டங்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தொடர்ந்த வழக்கில்
அரசியல் கட்சியினர் தினமும் நடத்தும் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு தருவது காவல்துறையின் பணி அல்ல என்றும் இனிவரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு வழங்குவதற்காக உரிய கட்டணம் நிர்ணயம் செய்து, அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதாகவும், ஒரு மணி நேரத்தில் பேரணியை முடிக்க வேண்டும் என்றும், பேரணி அல்லது பொதுக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால், நாம் தமிழர் கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
