திருமண வரன் தேடுபவர்களே சைபர் கிரைம் போலிசாரின் எச்சரிக்கை உங்களுக்கு தான்
இணையத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஜாக்கிரதை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
இணையதளத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஜாக்கிரதை என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கையில்:-
இணைய வழி குற்றப்பிரிவு, தலைமையகம்,சென்னை. திருமணவரன் தேடும் வலைத்தளங்கள் மூலம் முதலீட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
சைபர் குற்றவாளிகள் பல நுட்பமான முறைகளைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். சமீபத்தில் மோசடியாளர்கள் திருமணவரன் தேடும் தளங்களைப் பயன்படுத்தி தங்கள் மோசடிகளை நடத்துகின்றனர். அவர்கள் திருமணதளங்களில் போலிகணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமணவரன்களைத்தேடும் நபர்களை குறிவைக்கின்றனர். பின்னர் அவர்களைத் தொடர்பு கொண்டு, தொடர்ந்து உரையாடல்கள் மூலம் நம்பிக்கையைப் பெறுகின்றனர்.
அவர்களுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டவுடன், அவர்களை மோசடிகளில் சிக்க வைக்கின்றனர். இதில் உயர்வருமானம் தரும் போலி முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது. வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பரிசுக்கான கஸ்டம்ஸ் கட்டணம் செலுத்துமாறு கேட்பது அல்லது ஒரு அவசர நிலைக்காக பணம் கேட்பது போன்றவைகள் அடங்கும்.
சமீபத்தில் திருமணவரன் தேடும் தளங்களைப் பயன்படுத்தி போலி முதலீட்டு தளங்களில் (www.oxgatens.com. www.oxgatensnet. www.cityindexmain.com. www.cityindexlimited.com போன்றவை) பெரும்தொகையை முதலீடு செய்யவைப்பதில் ஒரு புதிய போக்கு காணப்படுகிறது. இந்த தளங்கள் நம்பகமானவை போல தோற்றமளிக்கும், மேலும் போலி வெற்றிக்கதைகள் மற்றும் தவறான லாபங்களைக் காட்டும். மக்கள் சிறிய தொகையை முதலில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் ஆரம்பத்தில் சிறிய தொகைக்கான லாபங்களையும் தருகின்றனர். இதனால் நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், அவர்கள் அதிக தொகையை முதலீடு செய்யும் போது பணத்தை திரும்பப்பெற முடியாது. மோசடியாளர் ஏமாற்றிவிடுகிறார்கள்.
தேசிய சைபர்கிரைம் புகார் போர்டலில் (cybercrimegov.in). 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன் தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு, திருமணவரன்தேடும் தளங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதில் போலி சுயவிவரங்களை உருவாக்கு வதைத்தடுக்க. சரியான அடையாள சரிபார்ப்பு மற்றும் பதிவு செய்யும் போது VPN பயனர்களை கட்டுப்படுத்துவது போன்றநடவடிக்கைகளை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது
மோசடி எவ்வாறு செயல்படுகிறது.
1) மோசடியாளர் ஒரு திருமணவரன் தேடும் தளத்தில் போலிகணக்குகளை உருவாக்குகிறார். அவர்கள் பெரும்பாலும் அழகாகவும். வெற்றிகரமான தொழிலில் இருப்பவர்களாகவும் மணப்பெண்,மணமகன்தேடும் தொடங்குகின்றனர். தங்களை நபர்களை அறிமுகப்படுத்துகின்றனர். அணுகி உரையாடலைத்
2) மோசடியாளர் பெரும்பாலும் WhatsApp அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்கின்றனர். காலப் போக்கில், அவர்கள் பாதிக்கப்பட்டவருடன் ஒரு உணர்வுபூர்வமான உறவை ஏற்படுத்தி, அவர்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர். அவர்கள் ஒரே மாதிரியான ஆர்வங்கள் மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்டிருப்பதாகக் கூறி உறவை வலுப்படுத்துகின்றனர்.
3) நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் மோசடியாளர் ஒரு முதலீட்டு வாய்ப்பை அறிமுகப்படுத்துகிறார். பெரும்பாலும் அவர்கள் ஒரு லாபகரமான திட்டத்தைப் பற்றி தங்களுக்கு அனுபவம் உள்ளதாகவோ அல்லது ஏற்கனவே முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டியதாகவோ கூறுகின்றனர். அவர்கள்போலி முதலீட்டு தளங்களுக்கான இணைப்புகளைப் பகிர்கின்றனர்.
4) பாதிக்கப்பட்டவர் இந்த தளங்களின் நம்பகத்தன்மையை சோதனை செய்யவதற்காக ஒரு சிறிய தொகையை முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார். போலிதளம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக சிறிய தொகைக்கான லாபங்களையும் தருகின்றனர். இதனால் நம்பிக்கை ஏற்படுத்தி மோசடியாளர் அதிகதொகையை முதலீடு செய்ய ஊக்குவிக்கிறார். மோசடியாளர் WhatsApp மற்றும் பிற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவரை தொடர்பில் வைத்திருக்கிறார். போலி லாபங்கள் மற்றும் சான்றுகளை வழங்குகிறார். அவர்கள் விரைவாக செயல்படுமாறு அழுத்தம் கொடுக்கிறார்.
5) பாதிக்கப்பட்டவர் அதிக தொகையை முதலீடு செய்த பின்னர். பணத்தை திரும்பப்பெறுவதில் சிக்கல்களை சந்திக்கின்றனர். தளம் "தொழில்நுட்ப பிரச்சினைகள்" என்று காட்டலாம் அல்லது வரி அல்லது கட்டணம் செலுத்துமாறு கேட்கலாம்.
6) மோசடியாளர் அதிகபட்ச தொகையைப் பெற்ற பின்னர், அனைத்து தொடர்புகளையும் துண்டித்து, தங்கள் சுய விவரங்களை நீக்கிவிட்டு மறைந்து விடுகிறார்
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
1) ஆன்லைனில் நீங்கள் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்க்கவும். அவர்கள் வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளைத் தவிர்த்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
2) ஆன்லைன் அறிமுகமானவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு போதும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். குறிப்பாக குறுகிய காலத்திற்குள் அதிகவருமானம் தருவதாக அவர்கள் உறுதியளித்தால் எச்சரிக்கையாக இருக்கவும். மோசடி @ @ @ohm www.oxgatens.com, www.oxgatens.net. www.cityindexmain.com. www.cityindexlimited.com Bum Bum வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். வலைத்தளங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். இதுபோன்ற போலி
3) மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களை அவசரமாக முதலீடு செய்யத்தள்ளுகிறார்கள். நம்பகமான நிதிநிபுணர்களுடன் பகுப்பாய்வு செய்து கலந்தாலோசிக்க உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
4) அந்நியர்களுடன் WhatsApp அல்லது பிற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களைப் பகிர வேண்டாம். நம்பகமான முதலீடுகள் முறையான சேனல்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.
புகாரளித்தல்
இதே போன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி отобот 1930-60x அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார்பதிவு செய்யவும்.
Tags: தமிழக செய்திகள்