தமிழக பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம் முழு விவரம் இதோ
தமிழக பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம் முழு விவரம் இதோ
இந்திய ரூபாய்க் குறியீடு (₹) என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான இந்திய ரூபாயின் பணக் குறியீடு ஆகும்.
இந்நிலையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோவில், முதல்வர் ஸ்டாலின், நாடு முழுதும் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான 'ரூ ' என குறிப்பிட்டு உள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற வாசகத்துடன் 2025- 2026ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் லச்சினயை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில், ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான 'ரூ' என்பதை முதன்மைப்படுத்தி லச்சினை வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், இந்திய அரசின் 14 அலுவல் மொழிகளில் ஒன்றை தான் முதல்வர் பயன்படுத்தி உள்ளார். இது தாய்மொழி மீதான பற்றை வெளிப்படுத்துகிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரானது இல்லை எனக்கூறப்பட்டு இருந்தது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
