பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கோயில் திருவிழாக்களில், பக்தர்கள் விட்டுச்செல்லும் எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்ய நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், அந்த நடைமுறைக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.
பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என அனுமதி வழங்கி தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
எச்சில் இலையில் உருளுவது வழிபாட்டு முறையாக இருப்பினும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
வழக்கு:-
கரூரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "நெரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் வரும் மே 18 ஆம் தேதி நடக்கவுள்ள ஆராதனை விழாவின் போது, சில பக்தர்கள் உணவருந்திய பிறகு, அந்த இலையில் அங்கப்பிரதட்சண வேண்டுதலை நிறைவேற்ற பிற பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இக்கோயிலில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இத்திருவிழாவில், இறுதி நிகழ்ச்சியாக இந்த வேண்டுதல் மேற்கொள்ளப்படும்.இந்த வேண்டுதலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
உத்தரவு:-
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 17-ம் தேதி கிராமங்களில் வழக்கமான மத நிகழ்வுகளை நடத்துவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ஒலி பெருக்கிகள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே அனுமதி பெற வேண்டும். எனவே, மனுதாரருக்கு அனுமதி வழங்குவது பற்றிய கேள்வியே இல்லை. சாதிப்பாகுபாடு இல்லை என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.பக்தர்கள் உணவை உட்கொண்ட பிறகு, வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை இல்லை. வழிபாட்டு உரிமை, அடிப்படை உரிமையை மனுதாரர் இவ்விஷயத்தில் பயன்படுத்த முடியும். இதில் மற்றவர்கள் தலையிட முடியாது. எனவே இந்த விழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது எனக் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்
