Breaking News

மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகளின் பயன்கள் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.



மகளிர் தினத்தையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினர் 1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகளை முதல்வர் வழங்கினார்

மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டையின் பயன்களாக, ஏசி பேருந்துகள் தவிர்த்து, நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் 25 கிலோ பொருள்களை 100 கி.மீ. தொலைவுவரையில் எடுத்துச் செல்ல இயலும்; பயிர்க்கடன், கால்நடைக் கடன், சிறுவணிகம், தொழில் முனைவோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன்களுக்கு முன்னுரிமை; கோ-ஆப்டெக்ஸில் 5 சதவிகித தள்ளுபடியும், ஆவின் நிலையங்களிலும் தள்ளுபடி; இ-சேவை மையங்களிலும் 10 சதவிகித அளவிலான கட்டணக் குறைவுடனும் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டை விவரங்களை பார்போம்.

மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகள் பயன்கள்:-

  • பேருந்துகளில் 25 கிலோ பொருட்களை விலையின்றி எடுத்துச் செல்லுதல்
  • கடன்களுக்கு முன்னுரிமை (பயிர்க், கால்நடைக், சிறுவணிகக், தொழில் முனைவோர், மாற்றுத் திறனாளிகள் கடன்)
  • கோ-ஆப்டெக்ஸ் 5% தள்ளுபடி & ஆவின் கடைகளில் தள்ளுபடி
  • இ-சேவை மையங்களில் 10% சேவைக் கட்டணம் குறைவு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback