சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம்! 7 நாள் கெடு ,தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் சென்னை மாநகராட்சி
சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம்! 7 நாள் கெடு ,தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் சென்னை மாநகராட்சி
சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம்,தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்
பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை" முன்னெடுக்கும் வகையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் மாநகராட்சி மேயர் பிரியா துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா,
சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழ் நமது தாய்மொழியாக, அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம்; இதற்கு ஏழு நாள் காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு தாக்கீது கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 7 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
