Breaking News

மூடநம்பிக்கையின் கொடூரம் 6 மாத குழந்தைக்கு பேய் இருப்பதாக கூறி நெருப்பின் மீது தலைகீழாக தொங்கவிட்ட மந்திரவாதி - குழந்தையின் கண்பார்வை பாதிப்பு

அட்மின் மீடியா
0

மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டடு தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. 

ஆனால், குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லாமல் பெற்றோர் அதே கிராமத்தை சேர்ந்த ராகவீர் என்ற மந்திரவாதியிடம் காண்பிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக மந்திரவாதி கூறியதை நம்பி ஆவியை வெளியேற்ற சடங்கு சிகிச்சை என்ற பெயரில் செங்கல்களை அடுக்கிவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ மூட்டி பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை ராகவீர் தடக் கட்டி தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். இதனால் பச்சிளம் குழந்தை தீயின் வெப்பத்தால் அலறி துடித்துள்ளது. இதன் விளைவாக, குழந்தையின் முகம் கடுமையாக எரிந்தது, மேலும் புகை காரணமாக அவரது இரண்டு கண்களின் கார்னியாக்களும் சேதமடைந்தன.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தாய் உடனடியாக குழந்தையை சிவபுரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  நடந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் மந்திரவாதி  மீது முறையான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மந்திரவாதி தலைமறைவாகிவிட்டார், மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.மூடநம்பிக்கையின் உச்சத்தால் தீயின் முன் 6 மாத குழந்தை தலைகீழாக தொங்கவிடப்பட்டதில் கண்பார்வை பாதிப்படைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback