சென்னை அருகே பயங்கரம் கோட்டூர்புரத்தில் 2 ரவுடிகள் வெட்டி கொலை
சென்னை அருகே பயங்கரம் கோட்டூர்புரத்தில் 2 ரவுடிகள் வெட்டி கொலை
சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடிகள் அருண், அவரது நண்பர் சுரேஷ் கொலை
தனது காதலியை கொலை செய்ததற்காக சுரேஷை பழிவாங்க அருண் திட்டமிட்டு இருந்ததாகவும், சுரேஷ் முந்திக்கொண்டு அருணை கொலை செய்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது; கொலையில் சம்பந்தப்பட்ட 8 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் 2025 மார்ச் 16 ஆம் தேதி கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் அமர்ந்து பேசி உள்ளனர்.
பின்னர் இருவரும் அதே இடத்தில் போதையில் இருந்ததால் அங்கேயே உறங்கியதாக தெரிகிறது. அப்போது 2025 மார்ச் 16 ஆம் தேதி சுமார் இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று படுத்திருந்த அருண் மற்றும் சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அருண் பலத்த காயம் அடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
