சென்னையில் மார்ச் 28ல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
சென்னையில் மார்ச் 28ல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Tags: அரசியல் செய்திகள்
