நாடு முழுவதும் 24, 25 ம் தேதி 2 நாட்கள் வங்கிகள் ஸ்டிரைக் - வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு Bank unions firm on March 24-25 strike
நாடு முழுவதும் 24, 25 ம் தேதி 2 நாட்கள் வங்கிகள் ஸ்டிரைக் - வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு Bank unions firm on March 24-25 strike
பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
9 வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு இதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.பேச்சுவார்த்தையின்போது,
- வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும்,
- பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும்,
- பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், அதற்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்களின் ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது. இது குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஏற்கனவே திட்டமிட்டபடி, 24 மற்றும் 25-ந் தேதிகளில் நாடுதழுவிய 2 நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
.jpg)