Breaking News

தமிழக வேளான் பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்ன? என்ன? முழு விவரம் TNAgriBudget2025

அட்மின் மீடியா
0

தமிழக வேளான் பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்ன? என்ன? முழு விவரம்.




TN Agri Budget 2025

காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.

பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.

பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.

புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்

ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு, 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கபடும்

கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்வு.கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். 

1000 இடங்களில் ‘முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்கப்படும்

மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். 

ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும். 

ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாகச் சென்று கண்டுணர்ந்து, அதனை தங்கள் வயல்களில் செயல்படுத்தும் விதமாக 100 முன்னோடி உழவர்கள் மேற்கூறிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் 

பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 

வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு 

புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback