Breaking News

சென்னையில் ₹2000 பஸ் பாஸ் வாங்கினால் 1 மாதம் முழுவதும் ஏசி உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும் செல்லலாம் முழு விபரம் Chennai MTC Monthly Bus Pass

அட்மின் மீடியா
0

சென்னையில் ₹2000 பஸ் பாஸ் வாங்கினால் 1 மாதம் முழுவதும் ஏசி உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும் செல்லலாம் முழு விபரம் Chennai MTC Monthly Bus Pass 

தற்போதுள்ள ₹1000 பாஸில் ஏசி பஸ் தவிர்த்து மற்ற பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்நடைமுறை ஜூன் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் எனத் தகவல்



தற்போது சென்னை மாநகர பேருந்து கழகம் சார்பில், ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் மூலம், மாநகர ஏசி பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளிலும் எந்த வழித்தடத்திலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ளலாம் என்ற வசதி உள்ளது

இந்நிலையில் சென்னையில் மாதம் 2000 ரூபாய் பஸ் பாஸ் முறை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பஸ் பாஸ் மூலம் ஏசி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும், பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது

மேலும் இந்த திட்டம் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback