Breaking News

குடி போதையில் 15 கிலோமீட்டர் தூரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் பேருந்தின் அடியில் ஸ்டெப்னி டயர்க்கு அடியில் பயணம் செய்த நபர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

குடி போதையில் 15 கிலோமீட்டர் தூரம் பேருந்தின் அடியில் ஸ்டெப்னி டயர்க்கு அடியில் பயணம் செய்த நபர் வைரல் வீடியோ

ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியிலிருந்து இந்துப்பூருக்குச் செல்லும் APSRTC பேருந்தின் அடியில் ஸ்டெப்னி டயர்க்கு அடியில் பயணம் செய்த நபர்


ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி டிப்போவிலிருந்து ஆர்டிசி பேருந்து இந்துப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது  ராம்புரம் அருகில் சென்று கொண்டிருண்ட போது பேருந்தின் அடியில் ஒருவர் தொங்குவதை இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனித்தனர். 

இது குறித்து டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர், ஆர்டிசி டிரைவர் பேருந்தின் அடியில் பார்த்தபோது, ​​ஸ்டெப்னி டயரில் ஒரு நபர் குடிபோதையில் கிடப்பதைக் கண்டு அவரை கீழே இறக்கிவிடப்பட்டார். 

பேருந்திலிருந்து இறங்கிய பிறகு, அவர் நடந்து சென்றுவிட்டதாக ஓட்டுநர் கூறினார்.நான் கோத்தசெருவிலிருந்து இந்துப்பூருக்கு வருகிறேன். கோட்டச்செருவில் ஒரு மனிதன் ஒரு உதிரி டயரில் அமர்ந்திருந்தான். அங்கிருந்து சிறிது தூரம் சென்ற பிறகு, பைக்குகளில் வந்தவர்கள் வந்து, உதிரி டயரில் ஒருவர் இருப்பதாகக் கூறினர். நாங்கள் உடனடியாக பேருந்தை நிறுத்தினோம். அந்த மனிதன் மிகவும் குடிபோதையில் இருந்தான். நாங்கள் அந்த நபரை அங்கே இறக்கிவிட்டோம். அவர் பாதுகாப்பாக இருக்கிறார். அவனை இறக்கிவிட்ட பிறகு, அவன் நடந்து சென்றார் என ஓட்டுநர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1901212113688986007

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback