டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் அமலாக்கத்துறை அறிக்கை முழு விபரம்
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் அமலாக்கத்துறை அறிக்கை முழு விபரம்
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் - மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும்,
ஆவணங்கள் இன்றி டெண்டர்களை ஒதுக்கியுள்ளதாகவும், ரூ.1000 கோடிக்கும் மேல் டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மதுபாட்டில் கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தில்100 கோடி முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிப்பு
எஸ்.என்.ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள், தேவி DINபாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜி.எல்.ஆர்.AR ஹோல்டிங் ஆகிய பாட்டிலிங் நிறுவனங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளி விவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடைபெற்றுள்ளது.
முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தத்தில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தங்கள் உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் - மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பார் உரிம டெண்டர்கள் முறையான விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு தரப்பட்டுள்ளன. முறையான கேஒய்சி, பான் விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கூட டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, கட்டடம் உட்கட்டமைப்பு ஆகியவற்றிலும் ஊழல் நடந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

