பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
மகளிருக்கு சம சொத்துரிமை வழங்கிடும் சட்டத்தை கடந்த 1989ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றினார். அவர் வகுத்துக் தந்த பாதையில் வெற்றி நடை போடும் நமது திராவிட மாடல் அரசு, மகளிருக்கு தமிழ் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் உரிய அதிகாரத்தையும் உறுதி செய்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சமூகத்தில் மட்டுமின்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்கள் பெண்கள் பெயரால் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
