வாட்ஸ்அப் வீடியோ கால் Visual Effects, செல்ஃபி ஸ்டிக்கர் என புதிய அப்டேட் முழு விவரம்
வாட்ஸ்அப் வீடியோ கால் Visual Effects, செல்ஃபி ஸ்டிக்கர் என புதிய அப்டேட் முழு விவரம்
வாட்ஸ்அப்பில் மெட்டா ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது, Whatsapp Update Selfie Stickers New Camera Effects"வாட்ஸ்அப்பை மிகவும் வேடிக்கையாகவும் பயன்படுத்த எளிதாகவும் மாற்ற நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம், எனவே உங்கள் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு புதுப்பிப்புகளுடன் புதிய ஆண்டைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
Visual Effects
பயனர்கள் கண்களுக்கு விருந்தாக, வாட்ஸ்அப் வீடியோ காலில் 30 வகையான Visual Effects-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா! வீடியோ அழைப்புகளில் ‘Backgraound' மாற்றிக்கொள்ளலாம். ஸ்நாப்சாட் செயலில் உள்ள போன்ற வசதிகளை இப்போது அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன்பு வரை Gallery-ல் இருந்த புகைப்படங்களை வைத்து ஸ்டிக்கர் உருவாக்கி வந்ததை மாற்றி, Camera மூலம் அப்போதே செல்ஃபி எடுத்து ஸ்டிக்கரை உருவாக்கும் அம்சமும் அறிமுகம்
இதன்மூலம் WHATSAPP கேமரா மூலம் நாம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, பிறருக்கு அனுப்பும் முன்பு, அதில் 30 வகை பேக்ரவுண்டுகளை தேர்வு செய்து சேர்க்கலாம்.
அதை பில்டர் செய்யவும், பிறகு மாற்றங்களை செய்யவும் முடியும். செல்பி ஸ்டிக்கரையும் சேர்க்கலாம். முதல்கட்டமாக ஆன்ட்ராய்டில் இது அறிமுகமாகியுள்ளது.
Selfie Stickers:-
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் செல்ஃபிக்களை ஸ்டிக்கர்களாக மாற்றி தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
வாட்ஸ் அப் கேமராவில் செல்ஃபி எடுத்து, அதை ஸ்டிக்கராக மாற்றும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கேமராவில் உள்ள ‘ Sticker’ என்பதை க்ளிக் செய்தால் செஃல்பி ஸ்டிக்கராக மாறிவிடும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குரூப் சாட்
குரூப் சாட் அல்லது பர்சனல் சாட்டின் போது, ஏதாவது ஒரு மேசேஜ்க்கு ரியாக்சன் செய்ய வேண்டுமானால், லாங்-பிரஸ் செய்து தம்ப்ஸ்அப் அல்லது ஹார்டின் போன்றவற்றை செய்திருப்போம். இனிமேல் லாங்-பிரஸ் செய்ய வேண்டியது கிடையாது. டபுள் டேப் செய்தாலேயே உங்களுக்கு ரியாக்சன் ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். இதில் ஏதாவது ஒன்றை அனுப்பி கொள்ளலாம்.
ஸ்டிக்கர் பேக்
உங்களுக்கு விருப்பமானவர்களுடன் நீங்கள் சாட் செய்யும்போது, அவர்களுக்கு பிடித்த சில ஸ்டிக்கர்கள் இருந்தால், அதை ஒரு பேக் போல சேமித்து வைத்து கொள்ளலாம்.
சாட் செய்யும்போது தேடாமலேயே அந்த பேக்கில் இருந்து அனுப்பி கொள்ளலாம். இதற்காக ஸ்டிக்கர் பேக் பீச்சர் கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து குயிக்கர் ரியாக்சன் பீச்சர் கிடைக்க இருக்கிறது.
Tags: தொழில்நுட்பம்
