Breaking News

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது UTTARAKHAND UNIFORM CIVIL CODE

அட்மின் மீடியா
0

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது!

பொது சிவில் சட்டத்திற்கான பிரத்யேக இணையதளமும் உத்தரகாண்டில் தொடங்கி வைப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஜனவரி 27முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 

சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த முதல் மாநிலமாக உத்தரகாண்ட் அமைந்துள்ளது


உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக பதவியேற்ற புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட வரைவை உருவாக்கி அதனை ஆராய 27 மே 2022 அன்று நிபுணர் குழு அமைத்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அந்த குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. தொடர்ந்து பொது சிவில் சட்டத்துக்கான மசோதா கடந்தாண்டு மார்ச் 8 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் அது மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இருவரின் ஒப்புதலுக்கு பிறகு பொது சிவில் சட்டம் கடந்தாண்டு மார்ச் மாதம் மார்ச் 12 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்துக்கான இணையதளம் இன்று தொடங்கப்படவுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback