வேலைவாய்ப்பு விசா விதிகளை கடுமையாக்கிய சவுதி அரேபியா... பாதிக்கப்படும் இந்தியா முழு விவரம் Saudi Arabia Tightens Work Visa Rules For Indian Workers
வேலைவாய்ப்பு விசா விதிகளை கடுமையாக்கிய சவுதி அரேபியா... பாதிக்கப்படும் இந்தியா Saudi Arabia Tightens Work Visa Rules For Indian Workers
Professional Verification Program procedure for issuing a work visa will be implemented effective from 14-01-2025.
சவூதி அரசாங்க தொழில்முறை சரிபார்ப்பு நடைமுறை 14/01/2025 முதல் செயல்படுத்தப்படும். எனவே, பணி விசா வழங்குவதற்கான கட்டாயத் தேவைகளில் ஒன்றாக தொழில்முறை சரிபார்ப்பு திட்டம் இருக்கும்.
இந்தியாவில் தூதரகத்தில் புதிய பணி விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், விசா விண்ணப்பிப்பவர் தொழில்முறை அங்கீகாரம் பெற வேண்டும்.
சவுதி அரேபியா நாட்டில் வெளிநாட்டவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வேலையில் இருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி சவுதி அரேபியாவில் 2.4 மில்லியன் இந்தியர்கள் தங்கி பணிபுரிகின்றனர். தற்போது, இந்தியர்கள் சவுதி அரேபியாவில் இரண்டாவது பெரிய வெளிநாட்டவர் சமூகமாக உள்ளனர், இந்த நிலையில் சவுதி அரேபியா அரசு தங்கள் நாட்டின் வேலை சம்பந்தப்பட்ட விசாவில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
சவுதி அரேபியாவில் செயல்படக்கூடிய நிறுவனங்களின் உரிமையாளர்களும், மனிதவளத்துறை அதிகாரிகளும் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களையும் அவர்களின் பணி அனுபவ சான்றிதழ்களையும் முன்கூட்டியே சரி பார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை விசாக்களை வழங்குவதற்கான கட்டாயத் தேவைகளில் ஒன்றாக தொழில்முறை சரிபார்ப்பு மாறும் என்றே சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பம் செய்பவர்களின் கல்வித் தகுதி சரிபார்க்கப்பட்டு அதற்கு பொருத்தமான வேலைக்கு தான் அவர் வருகிறார்களா, அதற்காக தான் விண்ணப்பம் செய்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்படும். இதனை அடுத்து தான் அவருடைய விசா விண்ணப்பம் செயல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
இந்தியர்களின் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக முன் சரிபார்ப்புத் தேவையை கட்டாயமாக்குவது என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே முன்மொழியப்பட்டது.
இந்திய தொழிலாளர்கள்
வேலை விசா
இந்தியர்கள்
சவுதி அரேபியா
Tags: வெளிநாட்டு செய்திகள்
