கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை RG Kar Kolkata doctor case
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை RG Kar Kolkata doctor case
நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொமை செய்யப்பட்ட கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள் ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி, மருத்துவமனையின் செமினார் ஹாலில் கொடூரமான முறையில் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்
இந்த வழக்கில் அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் ஆகஸ்ட் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கு செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது
இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு அல்ல. எனவே குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் பெண் மருத்துவர் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்

