Breaking News

கேரளாவில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை பறிமுதல் செய்த தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் வைரல் வீடியோ palakkad school student threatens to kill principal

அட்மின் மீடியா
0

கேரளாவில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை பறிமுதல் செய்த தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் வைரல் வீடியோ palakkad school student threatens to kill principal

Class 11 student threatens to kill principal for confiscating mobile phone in Palakkad கேரளாவில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை பறிமுதல் செய்ததால் செல்போனை கொடுக்காவிட்டால்  தலைமை ஆசிரியரை கொலை செய்வேன் என மிரட்டிய பள்ளி மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் பள்ளி மாணவர் ஒருவரின் செல்போனை தலைமை ஆசிரியர் பறித்துக் கொண்ட நிலையில், செல்போனை கொடுக்காவிட்டால் வெளியே வந்தவுடன் கொலை செய்வேன் என்று அந்த மாணவன் மிரட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் போனை பறிமுதல் செய்த பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாலக்காடு பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. 

இந்த நிலையில், பிளஸ் 1 படிக்கும் மாணவன் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்த நிலையில் ஆசிரியர் மாணவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவர் அந்த ஆசிரியரிடம் செல்போனை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த ஆசிரியர் செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால், கடும் கோபமடைந்த அந்த மாணவன், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கு சென்று, என் செல்போனை திருப்பி தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும்போது கொன்று விடுவேன் என்று எல்லோர் முன்பும் தைரியமாக மிரட்டிவிட்டு அறையில் இருந்து வேகமாக கிளம்பியுள்ளார்

இதைத்தொடர்ந்து, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (பி.டி.ஏ.) திரிதாலா போலீசில் புகார் அளித்துள்ளார், சம்பவம் குறித்து கல்வித்துறை விசாரித்து வருகிறது.

மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருவதை PTA கடுமையாக தடை செய்தது. இந்த பாலிசியின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட போன்கள் பெற்றோருக்கு மட்டுமே திருப்பி அனுப்பப்படும், அவர்கள் பள்ளிக்கு வந்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என PTA தலைவரும் அனக்கரா பஞ்சாயத்து உறுப்பினருமான VP ஷிபு கூறினார்.

மாணவன் தலைமை ஆசிரியரை மிரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1882090207396467107

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback