Breaking News

NEET UG தேர்வு இந்தாண்டு வழக்கம்போல் OMR முறையிலேயே நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

NEET UG தேர்வு இந்தாண்டு வழக்கம்போல் OMR முறையிலேயே நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு



நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது.

இந்தாண்டு NEET UG தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் என செய்திகள் வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை அறிவிப்பு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) முன்னர் தெரிவித்தபடி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அல்லது NEET (UG)-2025, பேனா மற்றும் காகித முறையில் (OMR அடிப்படையில்) ஒரே நாளில், ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback