Breaking News

Maharashtra train accident ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி கீழே குதித்த பயணிகள் எதிர் புறம் வந்த ரயில் மோதி 10 பேர் பலி 40 க்கும் மேற்பட்டோர் காயம் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

Maharashtra train accident ரயிலில் தீ விபத்து அச்சத்தில் கீழே குதித்த பயணிகள் எதிர் புறம் வந்த ரயில் மோதி 10 பேர் பலி 40 க்கும் மேற்பட்டோர் காயம் வீடியோ இணைப்பு

மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் - பரந்தா ரயில் நிலையம் அருகே நடந்த ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு 

புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து என்ற அச்சத்தில் ரயிலில் இருந்து குதித்தனர் துரதிர்ஷ்டவசமாக, மற்றொரு தண்டவாளத்தில் சென்ற கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி 10 பயணிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்


மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், ரயிலில் திடீரென புகை வந்ததால், ரயிலில் தீப்பற்றியதாக அஞ்சிய ரயில் பயணிகள் ண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தி தண்டவாளத்தில் இறங்கி, தப்பிக்க முயன்றிருக்கின்றனர். 

இதையடுத்து பயணிகள் பலரும் கீழே இறங்கினர். பின்னர் அருகிலிருந்த தண்டவாளத்தை கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழித்தடத்தில் அதிவேகமாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் பயணிகள் பலரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை 10 பயணிகள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள்  வெளியாகியுள்ளது. 

இந்த விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில்வே அதிகாரிகள், போலீசாரும், ஆம்புலன்ஸ்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1882054820049387955

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback